ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒரு ஆண்டுக்கு பின்னர் கலாம் செய்த இந்துத்வ அரசியலின் ஒரு பகுதிதான் சாவர்க்கர் படத்தை பா.ஜ .கா ஆதரவாக திறந்தது.இவர் இந்த காரியத்தை செய்வதற்கு முன்னர் எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.ஆனால் கலாம் அவற்றை பொருட்படுத்தவில்லை.
அவர் ஏழை ,சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்று இன்னும் புகழ் பாடுகின்றனர்.அப்படிப்பட்டவர் ஏன் ஒரு இந்துத்வ தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரை ஆதரிக்க வேண்டும்? புகழ் போதைக்கா அல்லது பதவி ஆசைக்கா ? எது என்பதை அவரது ரசிகர்கள் தெளிவு படுத்த வேண்டும்.
அந்த காலத்தில் தற்போது உள்ளது போல சமூக வலைத்தளங்கள் இல்லை.எழுத்து ஊடகங்களும் முக்கால் பங்கு இந்துத்வ வாதிகளின் கைகளில் இருந்த காலம். அதனால் இந்த சம்பவம் பெருமளவில் இந்திய மக்களுக்கு போய் சேரவில்லை.காலம் கடந்தாலும் அவர் நடந்து கொண்ட முறையை வெளிக்கொண்டு வரவேண்டியது எனது கடமையாக கருதுகிறேன்.
ஆதாரம் : https://timesofindia.indiatimes.com/india/portrait-of-savarkar-unveiled-amid-protest/articleshow/38667070.cms

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக